உங்கள் எனர்ஜி அற்புதம், எல்லா இடத்திலும் நீங்க தான் இருக்கீங்க.. கார்த்தி புகழ்ந்த நடிகர் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,March 28 2023]

எல்லா இடத்திலும் நீங்கள் தான் இருக்கின்றீர்கள், உங்கள் எனர்ஜி அற்புதம் என்று பிரபல நடிகர் ஒருவரை நடிகர் கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் புகழ்ந்துள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகர் நானி மற்றும் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான திரைப்படம் ’தசரா’. இந்த படம் வரும் 30ம் தேதி தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் இறுதி கட்ட புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் இந்த படத்தை பாராட்டி கார்த்தி தனது டுவிடட்ர் பக்கத்தில் கூறிய போது ’நடிகர் நானி எல்லா இடங்களிலும் நீங்கள் தான் இருக்கின்றீர்கள், இந்த எனர்ஜி மிகவும் அற்புதமாகவும் சந்தோஷமாக இருக்கிறது. ’தசரா’ படத்திற்கு என ஒரு சக்தி இருக்கிறது’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

ஸ்ரீகாந்த் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாக்கிய இந்த படம் 65 கோடி பட்ஜெட்டில் உருவாக்கி உள்ளதாகவும் சமுத்திரகனி, பிரகாஷ்ராஜ், சாய்குமார் உள்பட பலர் ’தசரா’ படத்தில் நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திரைப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’யூஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். இந்த படம் 2 மணி நேரம் 36 நிமிடங்கள் அதாவது 156 நிமிடங்கள் ரன்னிங் டைமாக கொண்டது என்றும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.