சொந்த கிராமத்திற்காக 'யார்க்கர்' நடராஜன் செய்த மகத்தான உதவி!

சொந்த கிராமத்தின் இளைஞர்களுக்காக இந்திய கிரிக்கெட் அணியின் யார்க்கர் மன்னன் நடராஜன் செய்த மகத்தான செயல் குறித்த தகவல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

தமிழகத்தை சேர்ந்த நடராஜன் கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய சென்ற இந்திய அணியில் இடம் பெற்று இருந்தார் என்பதும், அவர் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடராஜன் தனது சொந்த கிராமத்தின் இளைஞர்களுக்காக தனது செலவில் கிரிக்கெட் மைதானம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய அணியில் நான் அறிமுகமானேன் என்றும் இந்த ஆண்டு எனது சொந்த கிராம மக்களுக்காக ஒரு கிரிக்கெட் மைதானத்தை ஏற்பாடு செய்துள்ளேன் என்றும் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சொந்த கிராமத்தில் உள்ள இளைஞர்கள் கிரிக்கெட் மூலம் தங்களது வாழ்க்கையை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக சொந்த செலவில் கிரிக்கெட் மைதானத்தை ஏற்பாடு செய்துள்ள நடராஜனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஜய் பேசிய உருது வசனங்கள்: 'பீஸ்ட்' பட நடிகர் வெளியிட்ட தகவல்!

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகிய 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும்

அமுக்கு டுமுக்கு அமால் டுமால்: சிவகார்த்திகேயனின் 'டான்' ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் 

பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து முடித்திருக்கும் திரைப்படங்களில் ஒன்று 'டான்' என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று

முதல் படத்திலேயே பிரபலமான இயக்குனரின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்?

அறிமுகமான முதல் படத்திலேயே பிரபலமான இயக்குனர் ஒருவர் இயக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. 

தடுப்பூசி செலுத்தாவிட்டால் வேலை காலி… பீதியை கிளப்பும் பிரபல நிறுவனம்!

உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான கூகுள் மற்றும் அதன் தலைமை நிறுவனம் ஆல்ஃபாபெட் நிறுவனத்தில்

ஒமைக்ரான் பீதிக்கு இடையே தென்ஆப்பிரிக்காவில் மர்மநோய் பாதிப்பு…  WHO கவலை!

கொரோனா வைரஸின் புதிய உருமாறிய ஒமைக்ரான் கொரோனா வைரஸ் கடந்த நவம்பர் 24 ஆம் தேதி முதன்முதலில் தென்ஆப்பிரிக்காவின்