தடுப்பூசி போட்டு கொண்ட யார்க்கர் மன்னன்: புகைப்படம் வைரல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய கிரிக்கெட் அணியின் யார்க்கர் மன்னர் என்று கூறப்படும் தமிழரான நடராஜன் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து பொதுமக்கள் தங்களை கொரோனாவில் பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
திரை உலக பிரபலங்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் சற்று முன் யார்க்கர் மன்னன் நடராஜன் தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதுகுறித்த புகைப்படத்தை அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்து, அவர் கூறியிருப்பதாவது: இன்று காலை நான் எனது தடுப்பூசியைப் போட்டுக் கொண்டேன். அதற்கு மிகவும் நன்றியுடையவனாக இருப்பேன். மேலும் எங்கள் மக்களை ஆபத்திலிருந்து காத்துவரும் சுகாதார பணியாளர்களுக்கு எனது கோடானுகோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Am so grateful to get my #Vaccine this morning. A million thanks to our incredible health care workers who have put themselves at risk for our people . #LetsGetVaccinated #Jabbed pic.twitter.com/v21Ez3dJGV
— Natarajan (@Natarajan_91) May 27, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments