நயன்தாரா படத்தை புரமோஷன் செய்யும் யார்க்கர் கிங் நடராஜன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்த ’மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இதற்கான புரமோஷன் பணிகளை ஆர்ஜே பாலாஜி விறுவிறுப்பாக கவனித்து வருகிறார்
இந்த நிலையில் யார்க்கர் கிங் என்று அழைக்கப்படும் தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன், நயன்தாராவின் ’மூக்குத்தி அம்மன்’ படம் வெற்றியடைய தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து வீடியோ ஒன்றில் கூறியதாவது:
ஆர்ஜே பாலாஜி அவர்களுடைய ’மூக்குத்தி அம்மன்’ தீபாவளி அன்று ரிலீசாக உள்ளது. நான் இந்த படத்திற்காக ரொம்ப ஆவலாக காத்திருக்கின்றேன். நான் மட்டுமன்றி என்னுடைய குடும்பமும் என்னுடைய ஊர் பொதுமக்களும் இந்த படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளனர்.
ஏனெனில் ஆர்ஜே பாலாஜி அவர்களின் கமெண்ட்ரிக்கு எங்கள் ஊர் பொதுமக்கள் மிகப்பெரிய ரசிகர்களாகிவிட்டனர். அவருடைய கமென்ட்ரி அவ்வளவு சூப்பராக இருந்தது. எனவே அந்த படத்திற்காக நாங்கள் எல்லோரும் காத்திருக்கின்றோம் என்று கூறியுள்ளார். ஆர்ஜே பாலாஜியின் மூக்குத்தி அம்மன் படத்திற்காக நடராஜன் புரமோஷன் செய்து இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது
Congratulations Natarajan on your incredible journey ?? @Natarajan_91 best wishes for Australia Tour ????
— Nayanthara✨ (@NayantharaU) November 10, 2020
Happy to know that you and your family & entire people are waiting for #MookuthiAmman ?????? pic.twitter.com/NpK11gO728
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com