ஷாருக்கான் - அட்லி படத்தில் இணைந்த மேலும் ஒரு தமிழ் பிரபலம்!

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்க இருக்கும் திரைப்படத்தை அட்லி இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் டீசர் தயாராகி விட்டதாகவும் டீசருக்கான பின்னணி இசையை அனிருத் முடித்துவிட்டதாகவும் வெளிவந்த செய்தியைப் பார்த்தோம். இந்த படத்தில் ஏஆர் ரகுமான் பாடல்களை கம்போஸ் செய்ய உள்ளதாகவும் பின்னணி இசையை மட்டும் அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது

இந்த நிலையில் இந்த படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார் என்றும் அதில் ஒரு வேடத்தில் நடிக்கும் கேரக்டருக்கு நயன்தாரா ஜோடியாக நடிக்க உள்ளார் என்றும் செய்திகள் வெளியானது. மேலும் ஒரு பிரபல நடிகை ஒருவர் இந்த படத்தில் இணைய இருப்பதாகவும் அவர் அனேகமாக பிரியாமணி ஆக இருக்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது

இந்த நிலையில் தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகர் யோகிபாபு இந்த படத்தில் இணைய உள்ளது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் அவருக்கு நகைச்சுவை கேரக்டர் இல்லை என்றும் படத்தின் கதைக்கு திருப்புமுனையை ஒரு முக்கியமான கேரக்டர் என்றும் அதனால் அவரிடம் மொத்தமாக கால்ஷீட்டை அட்லி வாங்கி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே முதன்முதலாக பாலிவுட்டுக்கு யோகிபாபு செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி இந்த படத்தின் டெக்னீஷியன்கள் கிட்டத்தட்ட அனைவருமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் சரண் சக்தியின் கேரக்டர் இதுதானா?

வடசென்னை, நெற்றிக்கண் உள்பட ஒருசில படங்களில் நடித்த சரண் சக்தி, சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் இணைந்து உள்ளார் என்பதும் இவர் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்

விஜய்க்கு பா ரஞ்சித் சொன்ன சூப்பர் ஹிரோ கதையில் பிரபல ஹீரோ!

தளபதி விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் 'பீஸ்ட்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் 4வது கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

மணி ஹெய்ஸ்ட் சீசன் 5: எகிற வைத்த எதிர்பார்ப்பு பூர்த்தி செய்ததா?

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த மணி ஹெய்ஸ்ட் ஐந்தாவது சீசன் நேற்று வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? என்பதை பார்ப்போம்

பிக்பாஸ் தமிழ் சீசன் 5: அட்டகாசமான புரமோ வீடியோ!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் தமிழ் 4 சீசன்கள் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது என்பதும் ஐந்தாவது சீசன் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் தெரிந்ததே

ரொம்ப நல்லாயிருக்கு, இப்படி ஒரு முதல்வரை நான் பார்த்ததே இல்லை: விஜய்சேதுபதி

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சட்டசபையில் பேசுவது குறித்து கருத்து தெரிவித்த மக்கள் செல்வன் விஜய்சேதுபதி 'ரொம்ப நல்லா இருக்கு என்றும், இப்படி ஒரு எளிமையான முதல்வரை நான் பார்த்ததே இல்லை