'பீஸ்ட்' படம் 'கூர்கா'  படத்தின் கதையா? யோகிபாபு என்ன சொன்னார் தெரியுமா?

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் வரும் 13ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இந்த டிரைலரை பார்த்த ஒரு சிலர் ’பீஸ்ட்’ படம் 'கூர்கா’ படம் போல் இருப்பதாகவும் ’மணி ஹெய்ஸ்ட்’ படம் போல் இருப்பதாகவும் கூறினர்.

இந்த விமர்சனத்துக்கு ஏற்கனவே இயக்குனர் நெல்சன் பதிலளித்து விட்டார். பீஸ்ட் எந்த படத்தின் காப்பி இல்லை என்றும், ஒருசில காட்சிகள் ஒரே மாதிரி இருந்தாலும் கதை சொல்லும் விதம் வெவ்வேறானது என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் ’பீஸ்ட்’ படத்தில் நாயகனாக நடித்த யோகி பாபுவுக்கு சமீபத்தில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இதனை அடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது பீஸ்ட் 'கூர்கா’ படம் ஒப்பிடப்படுவது குறித்து கேட்டதற்கு அவர் பதில் அளிக்காமல் புன்சிரிப்புடன் நழுவி சென்றார்

மேலும் ’பீஸ்ட்’ திரைப்படம் வழக்கம்போல் விஜய் சாரின் அருமையான படம் என்றும், தாறுமாறாக ஹிட்டாகும் என்று அனைவரும் பாருங்கள்’ என்று மட்டும் கூறி விட்டு சென்று விட்டார். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாக வருகிறது.