close
Choose your channels

காரணமே இல்லாமல் தள்ளி வைக்கப்பட்ட 'யானை முகத்தான்': புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

Tuesday, April 11, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

யோகி பாபு நடித்த ’யானை முகத்தான்’ என்ற திரைப்படம் தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்தது. மேலும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் யானை முகத்தான் என்ற விநாயகர் கேரக்டரில் யோகி பாபு நடித்திருந்தார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் ஏப்ரல் 14 தினத்தில் 8 தமிழ் படங்கள் ரிலீஸ் ஆவதை அடுத்து ’யானை முகத்தான்’ படத்தின் ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான போஸ்டரில் ’எந்தவிதமான காரணமும் இல்லாமல் நாங்கள் ஒரு வாரம் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளோம், ஏப்ரல் 21ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகும்’ என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

ரஜிஷா மிதிலா இயக்கத்தில் உருவாகிய அந்த படத்தில் யோகி பாபு, ஊர்வசி, ரமேஷ் திலக், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பரத் ஷங்கர் இசையில் உருவான இந்த படம் நிச்சயம் யோகி பாபு ஒரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment