ஆஸ்திரேலியாவில் தமிழ்க்கடவுளை கண்டுபிடித்த யோகிபாபு
Send us your feedback to audioarticles@vaarta.com
கோலிவுட் திரையுலகில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் யோகிபாபு. விஜய் உள்பட முன்னணி ஹீரோக்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி யோகிபாபு, ஒருசில படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கே.எஸ்.அதியமான இயக்கி வரும் 'ஏஞ்சல்' என்ற படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கும் யோகிபாபு சமீபத்தில் அங்கிருந்து வெளியிட்ட வீடியோ ஒன்றில் கூறியதாவது:
'ஏஞ்சல்' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஆஸ்திரேலியா வந்துள்ளேன். இங்கு வந்து பத்து நாட்கள் ஆகியும் இப்போதுதான் இங்கு ஒரு முருகன் கோவில் இருப்பதை கண்டுபிடித்துள்ளோம். உலகின் எந்த இடத்தில் தமிழர்கள் இருந்தாலும் அங்கெல்லாம் தமிழ்க்கடவுள் முருகப்பெருமானும் இருப்பார் என்பதை புரிந்து கொண்டோம். முருகனை அனைவரும் வேண்டுவோம்' என்று கூறியுள்ளார்.
— Yogi Babu (@iYogiBabu) January 11, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments