'தளபதி 62' படத்தில் பிரபல காமெடி நடிகர்

  • IndiaGlitz, [Friday,December 01 2017]

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து அவர் அடுத்து நடிக்கவிருக்கும் 'தளபதி 62 படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். மேலும் இந்த படத்தின் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் என்பதும், ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் என்பதும் தெரிந்ததே. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க அதிக வாய்ப்புள்ளது என்பதையும் பார்த்தாகிவிட்டது.

இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல காமெடி நடிகர் யோகிபாபு இணைந்துள்ளதாக லேட்டஸ்ட்  தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த படத்தில் யோகிபாபுவின் கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், கதையுடன் அவரது கேரக்டர் பயணிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சுருக்கமாக கூறினால் 'துப்பாக்கி' படத்தில் சத்யனும், கத்தி' படத்தில் சதீஷும் நடித்தது போன்ற ஒரு கேரக்டரை யோகிபாபுவிற்காக 'தளபதி 62' படத்தில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் உருவாக்கியிருப்பதாக கூறப்படுகிறது எனவே இந்த படத்திற்கு பின்னர் யோகிபாபுவின் மார்க்கெட் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

அஜித்துடன் குரலில் நடித்துவிட்டேன், விரைவில் நிஜத்திலும் நடிப்பேன்: போஸ்வெங்கட்

சமீபத்தில் வெளியான கார்த்தியின் 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் கார்த்திக்கு அடுத்தபடியாக அனைவரையும் நடிப்பில் கவர்ந்தவர் போஸ் வெங்கட். இந்த படம் அவருடைய நடிப்பிற்கு ஒரு புதிய மைல்கல் என்றே கூறலாம்

பிரபுசாலமன் இயக்கும் அடுத்த படத்தில் பாகுபலி நடிகர்

கும்கி உள்பட பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் பிரபுசாலமன் தற்போது 'கும்கி 2' என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தில் மதிவாணன் மற்றும் அதிதிமேனன் ஆகியோர் அறிமுகமாகின்றனர்.

'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் 2 வார மெகா வசூல்

கார்த்தி, ராகுல்ப்ரித்திசிங் நடிப்பில் H.வினோத் இயக்கிய 'தீரன் அதிகாரம் ஒன்று' படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியா? விஷால் விளக்கம்

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ளதை அடுத்து முக்கிய அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு, பிரச்சாரத்திலும் ஈடுபட்டுள்ளன. 

விஸ்வரூபம் 2: ராணுவ உடையில் பாரத தாய்க்கு சலாம் போட்ட கமல்

கடந்த 2013ஆம் ஆண்டு வெளிவந்த கமல்ஹாசனின் 'விஸ்வரூபம்' தடைகள் பல கடந்து உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியதோடு, ரூ.100 கோடி வசூல் கிளப்பிலும் இணைந்தது