கொரோனா வைரஸில் இருந்து முருகப்பெருமான் காப்பாற்றுவார்: யோகிபாபு

கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை திரையுலகைச் சேர்ந்த பலர் சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு தெரிவித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. ரஜினிகாந்த், கமலஹாசன், சூர்யா உள்பட பலர் ஏற்கனவே கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்ட நிலையில் தற்போது முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராகிய யோகிபாபு சமூக வலைதளம் மூலம் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

கொரோனா வைரஸில் இருந்து நாம் எல்லாரும் தப்பிக்க வேண்டுமென்றால் பிரதமர் கூறியபடி, முதல்வர் கூறியபடி ஊரடங்கு உத்தரவை நாம் எல்லோரும் கடைபிடித்து, காவல்துறைக்கு சப்போர்ட் செய்ய வேண்டும். ஏனெனில் பல இடங்களில் கொரோனா வைரஸால் பல உயிர்கள் இழக்கப்பட்டு வருகிறது. இனி ஒரு உயிர் கூட போகக் கூடாது. அதற்கு நாம் எல்லோரும் அரசாங்கம் சொல்வதை கடைபிடிக்க வேண்டும். வீட்டிலே இருக்கவேண்டும். நாம் எல்லோரும் இதை செய்தால் இந்த வைரஸில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்

அதுமட்டுமின்றி இதையெல்லாம் தாண்டி நான் வணங்கும் முருகப்பெருமான் கண்டிப்பாக இந்த வைரஸில் இருந்து நம்மை எல்லோரும் காப்பாற்றுவார். எல்லா தெய்வங்களும் காப்பாற்றும். தெய்வங்களையும் நாம் வணங்குவோம்’ என்று யோகிபாபு தெரிவித்துள்ளார்.