close
Choose your channels

இந்த உலகம் உழைக்கிறவன மட்டும் தான் நம்பும்: விஜய் சேதுபதி வெளியிட்ட யோகி பாபு பட டீசர்..!

Friday, July 28, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

யோகி பாபு முக்கிய கேரக்டரில் நடித்த ’லக்கி மேன்’ என்ற படத்தின் டீசரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்

இந்த படத்தின் டிசரில், ‘ இந்த உலகம் அழகோடு இருக்கிறவரை ரசிக்கும், அறிவோடு இருக்கிறவனை மதிக்கும், பணத்தோடு இருப்பவரை பார்த்து பொறாமைப்படும், பவர்ல்ல இருக்குறவனை பார்த்து பயப்படும், ஆனால் என்னிக்குமே உழைக்கிறவன் மட்டும் தான் நம்பும்’ என்ற வசனத்துடன் ஆரம்பமாகிறது

யோகிபாபுவின் வழக்கமான அசத்தல் காமெடி காட்சிகள் இந்த படத்தில் இருப்பதால் அவருக்கு இன்னொரு வெற்றி படமாக இருக்கும் என்பது இந்த படத்தின் டீசரை பார்த்ததிலிருந்து தெரிகிறது.

யோகி பாபு முக்கிய வேடத்தில் நடக்கும் இந்த படத்தில் வீரா, ஆர்எஸ் சிவாஜி உட்பட பலர் நடித்துள்ளனர். பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில், சீன் ரோல்டான் இசையில் சந்திப் விஜய் ஒளிப்பதிவில் மதன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தை திங்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து உள்ள நிலையில் விரைவில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment