பாகிஸ்தான் ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த யோகிபாபு!
Send us your feedback to audioarticles@vaarta.com
இன்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி போட்டியில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது. ஐந்து ரன்களுக்கு மூன்று விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்து கொண்டிருந்த இந்திய அணி, ஜடேஜா மற்றும் தோனியின் பொறுப்பான ஆட்டத்தினால் வெற்றியின் விளிம்பு வரை போட்டியை கொண்டு வந்தது. இருப்பினும் இந்திய அணியின் போராட்ட குணத்த்தை பிரதமர் மோடி, ராகுல்காந்தி உள்பட பல பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய அணியின் தோல்வியை பாகிஸ்தான் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். இதனையடுத்து பாகிஸ்தான் ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகர் யோகிபாபு டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், 'இந்தியாவின் தோல்வியை கொண்டாடுவதற்கு முன்னர் பாகிஸ்தான் ரசிகர்கள் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் நாட்டு அணிக்கு அரையிறுதிக்கு செல்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ள செய்யுங்கள்' என்று கூறியுள்ளார்.
மேலும் வெற்றியோ, தோல்வியோ நிச்சயம் பாகிஸ்தான் அணியை விட எங்கள் நாட்டின் அணி சிறந்த அணியே என்றும் யோகிபாபு தெரிவித்துள்ளார்.
Well played #TeamIndia ??
— Yogi Babu (@yogibabu_offl) July 10, 2019
Pakistan people before celebrating our loss first give advice to your team players how to enter in Semi-Final ????
Win or loose we r always better than your team #INDvsNZ
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments