அஜித், விஜய்யை அடுத்து சூப்பர் ஸ்டாரை நெருங்கிய யோகிபாபு

  • IndiaGlitz, [Friday,February 08 2019]

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக இருந்து வருபவர் யோகிபாபு. அஜித், விஜய் உள்பட முன்னணி நடிகர்களின் படங்கள் அனைத்திலும் காமெடி வேடத்தில் இவர் நடித்து வருகிறார். ஒவ்வொரு வாரமும் வெளியாகும் திரைப்படங்களில் இவர் நடித்த படம் குறைந்தபட்சம் ஒன்றாவது இருக்கும். அந்த அளவுக்கு பிசியான நடிகராக யோகிபாபு உள்ளார்.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள அடுத்த படத்தில் யோகிபாபுவும் நடிக்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த செய்தி உறுதி செய்யப்பட்டால் யோகிபாபு ரசிகர்களுக்கு நிச்சயம் இந்த படம் பெரும் விருந்தாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த்-ஏ.ஆர்.முருகதாஸ் முதல்முறையாக இணையும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது.

More News

சூர்யாவின் 'என்.ஜி.கே' டீசர்: புதிய அப்டேட்

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'என்.ஜி.கே.' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது முழுவீச்சில் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.

நாளை முதல் ஓவியாவின் அடல்ட் பட டிரைலர்

பிக்பாஸ் புகழ் ஓவியா நடித்து வரும் படங்களில் ஒன்றான 90ml திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று

ஓவியாவின் '90ml' படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள்: இயக்குனர் தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பெற்ற நடிகை ஓவியா தற்போது 'காஞ்சா 3', ''90ml' , களவாணி 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

வருங்கால கணவருடன் செளந்தர்யா! வைரலாகும் புகைப்படம்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இரண்டாவது மகளும் திரைப்பட இயக்குனருமான செளந்தர்யாவின் திருமணம் வரும் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மீண்டும் இணையும் சிம்ரன், த்ரிஷா

கடந்த 1999ஆம் ஆண்டு வெளிவந்த 'ஜோடி' படத்தில் சிம்ரன் நாயகியாக நடிக்க அந்த படத்தில் அவருடைய தோழிகளில் ஒருவராக ஒரு சின்ன கேரக்டரில் த்ரிஷா நடித்திருப்பார்.