என் வாழ்நாளில் இப்படி ஒரு பிறந்த நாளை கொண்டாடியதில்லை: யோகிபாபு
Send us your feedback to audioarticles@vaarta.com
நகைச்சுவை நடிகர் யோகிபாபு நேற்று தனது வீட்டில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தனது பிறந்த நாளை கொண்டாடினார்; அதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இந்த நிலையில் என் வாழ்நாளில் இப்படி ஒரு பிறந்த நாளை கொண்டாடியதில்லை என்று யோகிபாபு குறிப்ப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
வணக்கம், அனைவரும் வீட்டில் பத்திரமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். கொரோனா என்ற வைரஸ் தொற்று அனைவருடைய வாழ்க்கையிலும் பல்வேறு மாற்றங்களைச் செய்துவிட்டது. என் வாழ்நாளில் இதுவரை இப்படியொரு பிறந்த நாளைக் கொண்டாடியதில்லை. ஏனென்றால், ஏதேனும் ஒரு படப்பிடிப்பில் இருப்பேன், அங்கு என் பிறந்த நாளைக் கொண்டாடுவேன். ஆனால் இந்த முறை வீட்டிலேயே கொண்டாடினேன்.
இந்த பிறந்த நாளை என் வாழ்க்கையில் இரண்டு வகையில் மறக்கவே முடியாது. ஒன்று கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே மாஸ்க் போட்டுக் கொண்டு கொண்டாடியது. இரண்டாவது குவிந்த வாழ்த்துகள். இந்தளவுக்கு என் மீது அன்பு, பாசம் வைத்திருக்கிறீர்கள் என்று நினைக்கும் போதும், பார்க்கும் போதும் இன்னும் உழைப்பதற்கு ஊக்கம் கொடுத்துள்ளது.
சமூக வலைதளத்தில் பலரும் எனக்கு வாழ்த்து தெரிவித்திருந்தீர்கள். அனைவருக்குமே நான் 'நன்றி' சொல்லியிருந்தால், அதற்கு ஒரு நாள் பத்தாது என்று தெரிந்துக் கொண்டேன். ஆகையால் யாருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிக்கவில்லையே என்ற வருத்தம் வேண்டாம். இந்த அறிக்கையின் மூலம் உங்கள் அனைவருக்கும் என் உள்ளம் கனிந்த மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், என்னை தொலைபேசி வாயிலாக வாழ்த்திய நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், கலை இயக்குநர்கள், மக்கள் தொடர்பாளர்கள், பத்திரிகையாளர்கள் என ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினருக்கும் என் நன்றி.. நன்றி.. நன்றி..
இவ்வாறு யோகிபாபு தெரிவித்துள்ளார்.
வாழ்த்திய அனைவருக்கும் நன்றி ???? pic.twitter.com/LnvDWyVkVz
— Yogi Babu (@iYogiBabu) July 23, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments