கருணாநிதி, ஓபிஎஸ் குறித்து யோகிபாபு கூறியது என்ன?

  • IndiaGlitz, [Monday,July 30 2018]

இன்றைய நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் யோகிபாபு. ஒவ்வொரு வாரமும் வெளியாகும் படங்களில் ஒரு படத்திலாவது அவர் நடித்திருப்பார். கடந்த வெள்ளியன்று வெளியான 'மோகினி' மற்றும் 'ஜூங்கா' ஆகிய இரண்டு படங்களிலும் யோகிபாபு நடித்துள்ளார். இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகிய இருவர் குறித்து யோகிபாபு சர்ச்சைக்குரிய கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ததாக ஒரு வதந்தி பரவி வருகிறது. இதுகுறித்து யோகிபாபு விளக்கம் அளித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது:

கடந்த சில நாட்களாக கலைஞர் அய்யா குறித்தும், ஓபிஎஸ் அய்யா குறித்தும் நான் கிண்டலாக எனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளதாக தவறான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. அது எனது பெயரில் உள்ள போலி டுவிட்டர் பக்கம். போலி டுவிட்டர் பக்கம் மூலம் நான் கூறியதாக சில கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. அது உண்மை அல்ல. எனது ஒரிஜினல் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்படும் கருத்துக்கள் மட்டுமே எனது கருத்து

நான் எந்த கட்சியையும் சாராதவன். எனவே அதிமுக, திமுக தொண்டர்கள் எனது பெயரில் உள்ள போலியான டுவிட்டர் பக்கத்தில் வந்த பதிவுகளை கருத்தில் கொள்ள வேண்டாம். அந்த பக்கங்களை யாரும் ஃபாலோ செய்யவும் வேண்டாம். எனது உண்மையான டுவிட்டர் பக்கத்தை மட்டும் ஃபாலோ செய்யுங்கள்' என்று தெரிவித்துள்ளார்.