இன்று யோகிபாபு பிறந்தநாள் மட்டுமல்ல, இன்னொரு முக்கிய நாள்: வைரல் புகைப்படங்கள்

  • IndiaGlitz, [Thursday,July 22 2021]

தமிழ் திரையுலகின் பிரபல காமெடி நடிகர் யோகிபாபு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடியதை அடுத்து அவருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள், கிரிக்கெட் வீரர் நடராஜன் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இன்று யோகிபாபுவின் பிறந்தநாள் மட்டுமின்றி அவருக்கு இன்னொரு முக்கிய விசேஷ நாளாகவும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. யோகி பாபு கடந்த ஆண்டு மஞ்சுபார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவருக்கு சில மாதங்களுக்கு முன்னர் மகன் பிறந்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இன்று அவர் தனது மகனுக்கு ’விசாகன்’ என்று பெயர் வைத்துள்ளார். யோகி பாபு மிகத் தீவிர முருக பக்தர் என்பதால் இந்த பெயரை தேர்வு செய்ததாகவும் கூறப்படுகிறது.

யோகிபாபுவின் திருமணம் மிகவும் எளிமையாக நடந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் வரவேற்பு நிகழ்ச்சியும் திட்டமிட்டபடி நடத்த முடியவில்லை. இதனை அடுத்து அவர் மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டு இருந்தார். ஆனால் வரவேற்பு நிகழ்ச்சிக்கு முந்தைய நாளே அவருக்கு குழந்தை பிறந்தது.

இதனை அடுத்து குழந்தையின் பெயர் வைக்கும் நிகழ்ச்சியை இன்று அவர் தனது வீட்டில் எளிமையாக நடத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் யோகிபாபுவின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது குறிப்பிடத்தக்கது.

More News

காதலுக்காக சமாதி ஆக்கப்பட்ட அனார்கலி? மனதை உருக்கும் ஓர் காதல் கதை!

ஷாஜகான்-மும்தாஜ் காதலை நாம் உச்சிக்கொட்டி புகழ்ந்து வருகிறோம். இந்த காதலுக்கு சற்றும் குறையாத ஒரு வரலாற்றுக் காதல் ஜோடிதான் சலீம்-அனார்கலி

ஓடிடியில் ரிலீஸ் ஆகும் விஜய்சேதுபதியின் இன்னொரு படம்!

விஜய் சேதுபதி நடித்த 'க/பெ ரணசிங்கம்' என்ற திரைப்படம் கடந்த ஆண்டு ஓடிடியில் ரிலீஸ் ஆனது என்பதும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பதும் தெரிந்ததே.

கொரோனாவால் அனாதையான குழந்தைகள்? அதிர்ச்சி தரும் கணக்கெடுப்பு!

கொரோனா பாதிப்பினால் தாய் மற்றும் தந்தை அல்லது தங்களது பாதுகாவலர்களை இழந்து உலகம் முழுவதும் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் அனாதையாக மாறியுள்ளனர்

ரூ.10 கோடி இழப்பீடு: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை வழக்கு!

முன்னாள் அமைச்சர் ஒருவர் மீது தமிழ் நடிகை ஒருவர் ரூபாய் 10 கோடி இழப்பீடு கேட்டு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

சூர்யா 40 படத்தின் அட்டகாசமான டைட்டில் மற்றும் மினி டீசர்!

பிரபல நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது என்பதும் இது சூர்யாவின் 40வது படம்