இயக்குனர் கவுதம் மேனனுக்கு நன்றி கூறிய யோகிபாபு: காரணம் இதுதான்!

  • IndiaGlitz, [Thursday,June 10 2021]

பிரபல இயக்குனர் கவுதம் மேனனுக்கு நடிகர் யோகிபாபு தனது டுவிட்டரில் நன்றி கூறியுள்ளார். இதற்கு காரணம் என்ன என்பதை தற்போது பார்ப்போம்

நடிகர் யோகி பாபு நடித்த ’மண்டேலா’ என்ற திரைப்படம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஓடிடியில் ரிலீஸ் ஆனது. இந்த படம் அனைத்து தரப்பினரின்ம் வரவேற்பை பெற்றது என்பதும் ஒரே ஒரு வாக்கு, ஜனநாயகத்தில் எந்த விதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நகைச்சுவையுடனும் அதே நேரத்தில் அரசியல் கிண்டலுடன் இந்த படம் பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தை சமீபத்தில் பார்த்த இயக்குநர் கவுதம் மேனன் தனது டுவிட்டர் பக்கத்தில் படக்குழுவினர்களுக்கு பாராட்டு தெரிவித்திருந்தார். ’மண்டேலா’ படத்தில் யோகி பாபு சிறப்பாக நடித்திருப்பதாகவும், அவருடன் இணைந்து வேலை செய்ய ஆசை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் சிறந்த நகைச்சுவை படம் என்றும் ’மண்டேலா’ படத்தை பாராட்டிய கவுதம் மேனன், பரத் சங்கரின் இசை தன்னை மிகவும் கவர்ந்ததாகவும் படக்குழுவினர் அனைவருக்கும் தனது பாராட்டுகள் என்றும் தெரிவித்திருந்தார்

கவுதம்மேனனின் இந்த பாராட்டுக்கு தான் நடிகர் யோகிபாபு தனது ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.