'தல தரிசனம் கிடைத்தது, அது போதும்.. சிஎஸ்கே மேட்ச் பார்த்த யோகிபாபு பேட்டி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தல தரிசனம் கிடைத்தது அது போதும் என சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டியை பார்த்த நடிகர் யோகி பாபு பேட்டி அளித்துள்ளார்.
நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி நடைபெற்றது என்பதும், இந்த போட்டியில் சிஎஸ்கே அணி ஆறு விக்கெட் வித்தியாச தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது
சிஎஸ்கே தோல்வி அடைந்தாலும் சென்னை ரசிகர்கள் இந்த போட்டியை மிகுந்த ஆர்வத்துடன் பார்த்தனர் என்பதும் குறிப்பாக தல தோனி கடைசி இரண்டு பந்துகளை சந்திக்க களம் இறங்கிய போது ரசிகர்களின் கரகோஷம் விண்ணை பிளந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த போட்டியை பார்க்க வந்த நடிகர் யோகி பாபு தனியார் சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய போது ’முதல் முறையாக நான் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் போட்டியை நேரில் பார்க்கிறேன். பலமுறை போட்டியை பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைத்த போதும் என்னால் வர முடியவில்லை. இங்கே அரங்கில் உட்கார்ந்து ரசிகர்களோடு கூட்டத்தோடு போட்டியை பார்த்த போது எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தது. குறிப்பாக தல கடைசி இரண்டு பால் ஆடினார், அது போதும் தல தரிசனம் கிடைத்துவிட்டது’ என்று கூறினார்.
மேலும் போட்டி முடிந்ததும் நடிகர் யோகிபாபு ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். அந்த செல்பி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நீங்க ஒரு வெறித்தனமான கிரிக்கெட் ரசிகர்னு எங்க எல்லோருக்குமே தெரியும் #yogibabu 🫡🤩#SoundOn #GameOn #IPLOnStar #CSKvKKR #RaceToPlayoffs pic.twitter.com/AcV5cj9WXC
— Star Sports Tamil (@StarSportsTamil) May 14, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com