சம்பளம் எவ்வளவு? மனம் திறந்த யோகிபாபு

  • IndiaGlitz, [Saturday,May 04 2019]

யோகிபாபுவின் ஒருநாள் சம்பளம் லட்சக்கணக்கில் இருப்பதாக கோலிவுட்டில் கூறப்பட்டு வரும் நிலையில் தன்னுடைய சம்பளம் எவ்வளவு என்பதை இன்று நடைபெற்ற 'தர்மபிரபு' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது:

தயாரிப்பாளர்களின் கஷ்டத்தை புரிந்தவன் நான். ஞானவேல்ராஜ் கூறியதுபோல் நான் எந்த தயாரிப்பாளரிடமும் பத்து லட்சம் சம்பளம் கேட்டதில்லை. ஏனெனில் நான் இரண்டாயிரம், மூவாயிரம் சம்பளம் வாங்கியவன் என்பது பலருக்கு தெரியும். பல தயாரிப்பாளர்களிடம் இருந்து பணம் வருவதில்லை என்பதுதான் உண்மை. பல புதிய இயக்குனர்கள், தயாரிப்பாளருக்கு நான் குறைவான சம்பளத்தில் நடித்து கொடுத்து உதவி செய்துள்ளேன். நேற்று கூட ஒரு இளம் இயக்குனர் தனது குடும்ப கஷ்டத்தை கூறிய நிலையில் அவருக்காக நான் பாதி சம்பளத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

எனவே என்னை பிடிக்காதவர்கள் எனது சம்பளம் குறித்து சொல்வதை யாரும் நம்ப வேண்டாம். என்னுடைய சம்பளம் எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமானால் நேராக என்னிடம் வந்து கேளுங்கள். மற்றவர்களிடம் கேட்க வேண்டாம். உங்க கம்பெனிக்கே நான் ரெண்டு படம் பண்ணியிருக்கேன். அதில் எவ்வளவு சம்பளம் கொடுத்தீர்கள் என்பது உங்களுக்கே தெரியும் என்று கூறினார். யோகிபாபுவின் இந்த வெளிப்படையான பேச்சு அனைவரையும் கவர்ந்தது.
 

More News

நீங்க சொல்றத கேட்க நான் ஒண்ணும் கட்சி தொண்டன் இல்லை: பரமபத விளையாட்டு டிரைலர் விமர்சனம்

த்ரிஷாவின் பிறந்த நாளை முன்னிட்டு சற்றுமுன் அவர் நடித்த 60வது திரைப்படமான 'பரமபத விளையாட்டு திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

தவறான தலைமையால் கஷ்டப்படுகிறோம்: 'தர்மபிரபு' ஆடியோ விழாவில் டி.சிவா

யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள 'தர்மபிரபு' படத்தின் ஆடியோ விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் யோகிபாபு உள்பட படக்குழுவினர்களும் சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொண்டனர்.

சினிமா வாய்ப்பை நம்பி வாழ்க்கையை தொலைத்த மாணவி! திடுக்கிடும் தகவல்

 நடனப்பள்ளி மாணவர் ஒருவர் சினிமா வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறிய நடன இயக்குனரை நம்பியதால் இன்று பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வாழ்க்கையையே தொலைத்த திடுக்கிடும் சம்பவம் ஒன்று

உங்க வேலையை முதலில் சரியா பாருங்க! பத்திரிகையாளருக்கு பதிலடி கொடுத்த வரலட்சுமி

குழந்தைகளுக்கான கால்பந்து போட்டி ஆகஸ்ட் 3ஆம் தேதி சென்னையில் தொடங்கவுள்ள நிலையில் இந்த போட்டியின் அம்பாசிடராக நடிகை வரலட்சுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

8 பேர் பலி, பல ஆயிரம் கோடி சேதம்: ஃபானி புயலால் உருக்குலைந்த ஒடிஷா!

நேற்று ஒடிஷா மாநிலம் வழியே கரையை கடந்த ஃபானி புயல், அம்மாநிலத்தின் பெரும்பகுதியை உருக்குலைய செய்து பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை சேதப்படுத்தியுள்ளது.