சூழ்நிலையை பார்த்தால் ஏப்ரல் 9ல் நடக்காது போல் தெரிகிறது: யோகிபாபு
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல காமெடி நடிகர் யோகிபாபு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மஞ்சு பார்கவி என்ற பெண்ணை திடீரென திருமணம் செய்தார். அவருடைய குலதெய்வம் கோவிலில் அவருடைய நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் தான் இந்த திருமணம் நடைபெற்றது.
இதனை அடுத்து அனைத்து திரையுலகினர்களையும் அழைத்து ஏப்ரல் 9ஆம் தேதி பிரம்மாண்டமான ரிசப்ஷன் நடத்த ஏற்பாடு செய்திருந்தார். இதற்காக அவர் அழைப்பிதழ்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் விஜயகாந்த் உட்பட பல பிரமுகர்கள் நேரில் சென்று அழைப்பு விடுத்தார். அவர்களும் கண்டிப்பாக யோகிபாபுவின் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக உறுதி அளித்திருந்தனர்.
இந்த நிலையில் திடீரென பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஏப்ரல் 14ம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இதனால் யோகிபாபுவின் திருமண ரிசப்ஷன் ஏப்ரல் 9ம் தேதி நடைபெற வாய்ப்பே இல்லை என தெரிகிறது.
இது குறித்து சற்று அதிருப்தியுடன் யோகிபாபு தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். ஏப்ரல் 9ஆம் தேதி என்னுடைய திருமண ரிசப்ஷன் பிரமாண்டமாக நடத்த முடிவு செய்தேன். ஆனால் தற்போது இருக்கும் சூழ்நிலை பார்க்கும்போது அது நடக்குமா? என்று எனக்கு தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். ஏப்ரல் 9ம் தேதி இல்லை என்றாலும் வேறு ஒரு நாளில் பிரம்மாண்டமாக அதே வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Planned the reception grandly on April 9 but after seeing the current situation don't know what to do
— Yogi Babu (@yogibabu_offl) March 26, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments