பிரபல இயக்குனரின் தயாரிப்பில் யோகிபாபு: ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்

  • IndiaGlitz, [Monday,February 03 2020]

பிரபல காமெடி நடிகர் யோகிபாபு சமீபத்தி ரஜினி, அஜித், விஜய் உள்பட பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அவர் ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வந்தார் என்பதும் அவர் ஹீரோவாக நடித்த தர்ம பிரபு உள்ளிட்ட ஒரு சில படங்கள் நல்ல வெற்றியை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து தொடர்ந்து யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் படங்களும் தயாராகி வருகின்றன. அந்த வகையில் யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் இன்னொரு திரைப்படத்தின் அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. பிரபல இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் பிஜி முத்தையா தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படமான ’காக்டெயில்’ என்ற திரைப்படத்தில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. விஜய முருகன் இயக்கத்தில், சாய் பாஸ்கர் இசையில், நவீன் ஒளிப்பதிவில், பாசில் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தின் டீசர் மிக விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் இன்னொரு படமும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தமிழ் திரைப்படத்தின் ஹீரோவாகும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர், சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர் ஹர்பஜன் சிங் கடந்த சில ஆண்டுகளாகவே தமிழில் டுவீட் செய்து தமிழ் மக்களை கவர்ந்து வருகிறார் என்பது தெரிந்ததே. 

இளம் இயக்குனருடன் இணையும் தனுஷ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தனுஷ் நடித்த 'பட்டாஸ்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பது தெரிந்ததே

ஐஸ்வர்யா தத்தா நிர்வாணமாக நடித்த படத்தின் டீசர் குறித்த தகவல்

'பொல்லாத உலகில் பயங்கர கேம்' என்று கூறப்படும் 'பப்ஜி' என்ற திரைப்படத்தில் ஐஸ்வர்யா தத்தா ஆடையின்றி நிர்வாணமாக ஒரு காட்சியில் நடித்து இருந்தார் என்ற செய்தி சமீபத்தில்

கமல்ஹாசனின் 'அல்வா' விமர்சனத்திற்கு செல்லூர் ராஜூ பதிலடி

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் நேற்று பாராளுமன்றத்தில் 2020ஆம் ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் ஒரு சில அம்சங்கள் ஏழை எளிய

நடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்தாதது ஏன்? கருணாஸ் விளக்கம்

கடந்த ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தல் செல்லாது என சென்னை ஐகோர்ட் சமீபத்தில் தீர்ப்பளித்த நிலையில் தற்போது இந்த தீர்ப்பை எதிர்த்து விஷால் தரப்பு