ஹீரோவாக யோகி பாபுவின் அடுத்த படம்.. வீடியோவை வெளியிட்ட மடோன் அஸ்வின்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
யோகி பாபு தனது பிறந்த நாளை நேற்று கொண்டாடிய நிலையில் அவர் ஹீரோவாக நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தின் வீடியோவை ’மண்டேலா’ மற்றும் ’மாவீரன்’ இயக்குனர் மடோன் அஸ்வின் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது
யோகி பாபு ஹீரோவாக நடிக்க இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ’வானவன்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சஜின் கே சுரேந்திரன் என்பவர் இயக்க இருக்கிறார்.
இந்த படத்தில் யோகி பாபு உடன் ரமேஷ் திலக், காளி வெங்க, லட்சுமி பிரியா, சந்திரமௌலி உள்பட பலர் நடிக்க உள்ளனர் இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய மோஷன் போஸ்டரை மடோன் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு யோகி பாபுவுக்கும் ’வானவன்’ குழுவிற்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
பவி கே பவன் ஒளிப்பதிவில் ஜார்ஜ் படத்தொகுப்பில் உருவாகும் இப்படத்தை 'ஈடன் ஃபிளிக்ஸ் புரொடக்ஷன்ஸ்' தாமஸ் ரென்னி ஜார்ஜ் தயாரித்து வருகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ‘96’ புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்து வருகிறார்.
Happy to reveal the title of @iYogiBabu anna’s next, #VAANAVAN
— Madonne Ashwin (@madonneashwin) July 22, 2023
Directed by @sajinksofficial 🎬
Best wishes to the entire team ❤️💐#Edenflicks #ThomasGeorge@thilak_ramesh @LakshmiPriyaaC @Kaaliactor @Nathanprathana#Kalkkiraja #Shakthirithvik @PaviKPavan1 #GovindVasantha… pic.twitter.com/QOOZCqhnAD
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com