ஹீரோவாக யோகி பாபுவின் அடுத்த படம்.. வீடியோவை வெளியிட்ட மடோன் அஸ்வின்..!

  • IndiaGlitz, [Sunday,July 23 2023]

யோகி பாபு தனது பிறந்த நாளை நேற்று கொண்டாடிய நிலையில் அவர் ஹீரோவாக நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தின் வீடியோவை ’மண்டேலா’ மற்றும் ’மாவீரன்’ இயக்குனர் மடோன் அஸ்வின் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

யோகி பாபு ஹீரோவாக நடிக்க இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ’வானவன்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சஜின் கே சுரேந்திரன் என்பவர் இயக்க இருக்கிறார்.

இந்த படத்தில் யோகி பாபு உடன் ரமேஷ் திலக், காளி வெங்க, லட்சுமி பிரியா, சந்திரமௌலி உள்பட பலர் நடிக்க உள்ளனர் இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய மோஷன் போஸ்டரை மடோன் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு யோகி பாபுவுக்கும் ’வானவன்’ குழுவிற்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பவி கே பவன் ஒளிப்பதிவில் ஜார்ஜ் படத்தொகுப்பில் உருவாகும் இப்படத்தை 'ஈடன் ஃபிளிக்ஸ் புரொடக்ஷன்ஸ்' தாமஸ் ரென்னி ஜார்ஜ் தயாரித்து வருகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ‘96’ புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்து வருகிறார்.

More News

தோழிகளுடன் பிகினி போஸ்.. கண் சிமிட்டும் அழகி பிரியா வாரியர் போட்டோஷூட்..!

ஒரே ஒரு கண்சிமிட்டல் வீடியோ மூலம் இந்தியா அளவில் பிரபலமான நடிகை பிரியா வாரியர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோழிகளுடன் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில்

அமிதாப்பின் 'ஷோலே' படத்தில் கமல் பணிபுரிந்தாரா? அவரே கூறிய ஆச்சரிய தகவல்..!

அமிதாப் பச்சன், தர்மேந்திரா,  ஹேமாமாலினி நடித்த 'ஷோலே' திரைப்படம் கடந்த 1975 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தில் கமல்ஹாசன் பணிபுரிந்துள்ளார்

டிடிஎஃப் வாசனின் 'மஞ்சள் வீரன்' படத்தில் இணைந்தாரா அனிருத்?

யூடியூப் மூலம் பிரபலமான டிடிஎஃப் வாசன் 'மஞ்சள் வீரன்' என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்றும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ போஸ்டர் வெளியானது என்பதையும் பார்த்தோம்.

ஜூலை 28ல் தனுஷ் ரசிகர்களுக்கு டபுள் விருந்தா?

இன்று சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் அவர் நடித்த 'கங்குவா' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது. இந்த நிலையில் வரும் 28ஆம் தேதி தனுஷ் தனது

'இந்தியன் 2' படத்தின் VFX காட்சிகள்: வேற லெவல் புகைப்படம் வெளியிட்ட ஷங்கர்..!

 உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது  தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக இந்த படத்தின் கம்ப்யூட்டர்