தொடர்ச்சியாக ரிலீஸ் ஆகும் யோகிபாபு படங்கள்!

  • IndiaGlitz, [Thursday,March 28 2019]

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகிபாபு தற்போது முன்னணி நடிகர்களின் படங்கள் அனைத்திலும் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி கதாநாயகனாகவும் அவர் ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் யோகிபாபு நடித்த படங்கள் தொடர்ச்சியாக ரிலீஸ் ஆகின்றன. இன்று நயன்தாராவுடன் யோகிபாபு நடித்த 'ஐரா' ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் அடுத்த வாரம் அதாவது ஏப்ரல் 4ஆம் தேதி ரிலீஸ் ஆகும் ஜிவி பிரகாஷின் 'குப்பத்து ராஜா' படத்திலும் யோகிபாபு நடித்துள்ளார். மேலும் அதற்கு அடுத்த வாரம் அதாவது ஏப்ரல் 12ஆம் தேதி வெளியாகும் ஜிவி பிரகாஷின் 'வாட்ச்மேன்' படத்திலும் யோகிபாபு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மே மாதம் ரிலீஸ் ஆகும் ஜீவாவின் 'கொரில்லா' படத்திலும் யோகிபாபு ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்த நிலையில் யோகிபாபு கதாநாயகனாக நடித்துள்ள 'தர்மபிரபு' திரைப்படமும் மே மாதம் ரிலீஸ் ஆகவுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவுள்ள ஒருசில படங்களிலும் யோகிபாபு நடித்துள்ளார் என்பதால் யோகிபாபு நடித்த படங்கள் ரிலீஸ் ஆகும் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.