அந்த கிரீடத்தை அடிச்சிடோம்னா, பல தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம்: 'தூக்குதுரை' டீசர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகி பாபு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பதும் அவர் ஹீரோவாக நடித்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் யோகி பாபு முக்கிய கேரக்டரில் நடித்த திரைப்படங்களில் ஒன்று ‘தூக்குதுரை’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆகயிருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பழமையான கிராமத்தில் இருக்கும் கோயில் ஒன்றில் உள்ள கிரீடத்தை திருடுவதற்காக யோகி பாபு தலைமையிலான கூட்டம் ஒன்று கிராமத்திற்குள் வருகிறது. இந்த கூட்டம் கிரீடத்தை திருடும் முன் அந்த கிராமத்தில் உள்ள ஒருவர் கிரீடத்திற்கு ஆசைப்படுவது, யோகிபாபுவுக்கு திடீரென காதல் தோன்றுவது ஆகிய காட்சிகள் படத்தில் உள்ளன. மொத்தத்தில் கிரீடம் திருடப்பட்டதா? என்பதை காமெடியாக கூறியிருக்கும் கதை தான் ‘தூக்குதுரை’ திரைப்படம் என்பது இந்த டீசரிலிருந்து தெரியவருகிறது.
யோகி பாபு, இனியா, மொட்ட ராஜேந்திரன், மகேஷ் சுப்பிரமணியன், சென்ராயன், பாலசரவணன், நமோ நாராயணன், கும்கி அஸ்வின், மாரிமுத்து உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான இந்த படத்தை டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே ’ட்ரிப்’ என்ற படத்தை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கே எஸ் மனோஜ் இசையில் உருவாக்கிய இந்த படம் யோகி பாபுவுக்கு மற்றொரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
It's time to relish your real laughter with the crazy gang from #Thookudurai 🎭👑
— Yogi Babu (@iYogiBabu) June 10, 2023
The Official Teaser is out Now
🔗https://t.co/Gdtkzx7gEZ
Starting Hero @smahesh0603
I have done a important role 🔥
Thank you 🎬 @dennisfilmzone & @opengatepicture
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments