காப்பாத்தலாம்னு வந்தா சிலம்பரசன் மாதிரியா பேசுற: யோகிபாபுவின் ட்ரிப் டீசர்

  • IndiaGlitz, [Friday,February 07 2020]

தமிழ் திரையுலகின் காமெடி நடிகராக மட்டுமின்றி ஒருசில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வரும் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்த இன்னொரு திரைப்படம் ட்ரிப். இந்த படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ளது

ஒரு அடர்ந்த காட்டுக்கு ட்ரிப் செல்லும் யோகிபாபு, சுனைனா மற்றும் நண்பர்கள் சிலர் காட்டில் ஒரு அமானுஷ்ய சக்தியால் மாட்டிக்கொள்கின்றனர். இதனால் ஏற்படும் விளைவுகள் மற்றும் ஆபத்துகள் தான் இந்த படத்தின் கதை

முழுக்க முழுக்க காட்டில் படமாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டீசரை பார்க்கும்போதே இந்த படம் ஒரு த்ரில், சஸ்பென்ஸ் கலந்த படம் என்பது தெரிவடால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரிக்கும் என்று கூறலாம்.அதே நேரத்தில் த்ரில் காட்சிகளுக்கு மத்தியில் யோகிபாபு, மொட்ட ராஜேந்திரன், கருணாகரன் காமெடி இடையிடையே இருப்பதால் ரசிக்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

குறிப்பாக டீசரின் கடைசியில் மரத்தில் கட்டி போடப்பட்டிருக்கும் கருணாகரனிடம் யோகிபாபு, ‘என்னடா இங்க வந்து உட்கார்ந்திருக்க என்று கேட்க அதற்கு கருணாகரன், ‘முதலில் பேண்ட்டுக்குள் இருப்பதை வெளியில எடுத்துவிடு என்று கூற அதற்கு யோகிபாபு, ‘காப்பாற்றலாம்ன்னு வந்தா சிலம்பரசன் மாதிரி பேசுறியே என்று சிம்புவை கலாய்க்கும் காமெடி காட்சி ரசிக்கும் வகையில் உள்ளது

யோகிபாபு, சுனைனா, கருணாகரன், மொட்ட ராஜேந்திரன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை என்பவர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கியுள்ளார்