'காசு கொடுத்தால்தான் ஓட்டு': யோகிபாபுவின் 'மண்டேலா' டீசர்

  • IndiaGlitz, [Saturday,March 13 2021]

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான யோகி பாபு, ஒரு சில திரைப் படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பதும் அவ்வாறு அவர் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று ‘மண்டேலா’ என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சற்று முன் ‘மண்டேலா’ திரைப்படத்தின் டீசர் வெளியானது. தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் சம்பந்தமான கதை அம்சம் கொண்ட திரைப்படம் என்பதால் இந்த திரைப்படத்தின் டீசருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

குறிப்பாக 20 ரூபாய் டோக்கன் கொடுப்பது, ஓட்டுக்கு பணம் கொடுப்பது, வெளியூரில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஆட்களை இறக்கி வந்து ஓட்டு போட வைப்பது ஆகிய காட்சிகள் நகைச்சுவையின் உச்சகட்டமாக உள்ளது

மேலும் இந்த திரைப்படத்தில் ‘மண்டேலா’ கேரக்டரில் நடித்திருக்கும் யோகி பாபு சவரதொழிலாளியாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த டீசரின் கடைசியாக மூன்றாவதாக போட்டியிடும் ‘நோட்டா’ தனக்கு காசு கொடுக்கவில்லை என்றும், காசு கொடுத்தால்தான் ஓட்டு என்றும் கறாராக யோகிபாபு கூறும் வசனம் நகைச்சுவையின் உச்சகட்டமாக உள்ளது. இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது