யோகி பாபுவின் அடுத்த படம் குறித்த அசத்தல் தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக இருந்து வரும் நடிகர் யோகிபாபு, ஒரு சில திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. அவர் ஹீரோவாக நடித்த ’தர்மபிரபு’, கூர்கா உள்பட ஒரு சில திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் யோகிபாபு ஹீரோவாக நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று ’மண்டேலா’. இந்த படத்தை ’காதலில் சொதப்புவது எப்படி’, ’வாயை மூடி பேசவும்’, 'மாரி' மற்றும் ’மாரி 2’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் பாலாஜி மோகன் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம் தொடங்கிய நிலையில் தொடர்ச்சியாக நடைபெற்று தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
மண்டேலா படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் அதாவது நவம்பர் 19ஆம் தேதியுடன் முடிவடைந்து விட்டதாகவும், இதனை அடுத்து விரைவில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் தொடங்கும் என்றும் தயாரிப்பாளர் பாலாஜி மோகன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தை அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு சங்கர் என்பவர் இசையமைத்துள்ளார் இந்தப்படம் யோகிகளின் மேலும் ஒரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மடோனா அஸ்வின் இயக்கும் இந்த படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்து வருகிறார்.
Wrapped up shoot for my 1st Feature film production #Mandela :)
— Balaji Mohan (@directormbalaji) November 19, 2019
Directed by @madonneashwin
Starring @iYogiBabu
An @OpenWindowOffl Production in association with @StudiosYNot @RelianceEnt @Wishberry_in@sash041075@chakdyn#YNOT17 @vidhu_ayyanna @philoedit @bharathsankar12 pic.twitter.com/cxlUGApb86
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments