'தர்மபிரபு'வை அடுத்து கூர்கா' ரிலீஸ் தேதியும் அறிவிப்பு!

  • IndiaGlitz, [Wednesday,June 26 2019]

தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக மட்டுமின்றி தற்போது முன்னணி நடிகராகவும் வளர்ந்து வரும் யோகிபாபு நடித்த 'தர்மபிரபு' திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் ஜெட் வேகத்தில் நடந்து வரும் நிலையில் யோகிபாபுவின் அடுத்த படமான 'கூர்கா' படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது

யோகிபாபுவின் 'கூர்கா' திரைப்படம் வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 'தர்மபிரபு' ரிலீஸ் ஆன இரண்டே வாரத்தில் 'கூர்கா' ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு படங்களிலும் யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளதால் இந்த இரண்டு படங்களும் வெற்றி பெற்றால் அவரது லெவலே வேறு என்று கூறப்படுகிறது

யோகிபாபு, ஆனந்த்ராஜ், லிவிங்ஸ்டன், பிரதீப் , கனடா நடிகை எலிசியாஉள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ராஜ் ஆர்யன் இசையமைத்துள்ளார். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சாம் ஆண்டன் இயக்கியுள்ளார்.,