முக்கிய வேடத்தில் யோகிபாபு: டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட்லுக் வெளியீடு
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராகிய யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்கும் படம் 'கூர்கா'. 'டார்லிங்' பட இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கும் இந்த படத்தில் யோகிபாபு கூர்கா வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சற்றுமுன் வெளிவந்துள்ளது.
கூர்கா சீருடையில் யோகிபாபு நிற்க அவருக்கு அருகில் நாய் ஒன்று கூலிங் கிளாஸ் கண்ணாடியுடன் கழுத்தில் மஞ்சள் துணியை கட்டிக்கொண்டு வித்தியாசமாக நிற்கும் இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.
4 மங்க்கி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ராஜ் ஆர்யன் இசையமைக்கின்றார். திலிப் சுப்பராயன் சண்டை பயிற்சியில் சதிஷ் கிருஷ்ணன் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.
Happy to launch the first look of #Gurkha ??My Wishes to the lead actor @iYogiBabu ..Very happy for him??Best wishes to @4monkeysStudio my dear friends @AntonyLRuben @dancersatz @dhilipaction Dir @samanton21 and full team???? pic.twitter.com/8CbMxElCGj
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) September 15, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments