'வாரிசு அரசியலை தடுத்தே ஆக வேண்டும்: 'தர்மபிரபு' டிரைலர் விமர்சனம்
Send us your feedback to audioarticles@vaarta.com
யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்த 'தர்மபிரபு' திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. பிரமாண்டமான செட்டுக்கள், அரசியல் நையாண்டி வசனங்கள், தற்கால அரசியல், எமலோகம் என படக்குழுவினர் இறங்கி அடித்துள்ளனர்,.
'வாரிசு அரசியலை தடுத்தே ஆக வேண்டும்' என்ற டிரைலரில் இருக்கும் முதல் வசனமே பார்வையாளர்களை நிமிர்ந்து உட்கார வைக்கின்றது. 'என் உயரமே 5.5 தாண்டா, இமயத்தின் உயரமாம்' என கலாய்க்கும் யோகிபாபுவை நிச்சயம் அனைத்து தரப்பினர்களும் ரசிப்பார்கள். பெண்களை மயக்கும் போலிச்சாமியார்கள் குறித்த வசனம் கவனத்தை பெறுகிறது.
அதேபோல் 'சாவது யாராக இருப்பினும் கொல்வது நாமாக இருக்க வேண்டும்' என்ற ரேகா பேசும் வசனம் அதற்கு ராதாரவி கொடுக்கும் ரியாக்சன் அருமை. அதேபோல் இன்றைய பிரச்சனைகளில் ஒன்றான தமிழ் மொழி குறித்த வசனமும் அசர வைக்கின்றது. மொத்தத்தில் ஒரு பொழுதுபோக்கு படமாக மட்டுமின்றி இன்றைய சூழ்நிலைக்கு தகுந்தவாறு ஒரு படத்தை காமெடி கலந்து இயக்குனர் முத்துகுமாரன் இயக்கியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன், மகேஷ் முத்துசுவாமி, சான் லோகேஷ் மற்றும் பாலசந்தர் ஆகிய தொழில்நுட்ப கலைஞர்களும் இயக்குனருக்கு பக்கபலமாக இருப்பதால் இந்த படம் ஒரு வெற்றிப்படமாக அமைய அதிக வாய்ப்புகள் உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments