ஓடிடியில் அடுத்த தமிழ்ப்படம்: ஜூலை 10 ரிலீஸ் என அதிகாரபூர்வ அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில மாதங்களாக ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் திறக்கப்படவில்லை. எப்போது திரையரங்குகள் திறக்கப்படும் என்பது குறித்த தகவலும் இல்லை. எனவே வேறு வழியின்றி ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகின்றன. நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்த திரைப்படங்களான ‘பொன்மகள் வந்தாள்’ மற்றும் பெண்குயின்’ ஆகிய திரைப்படங்கள் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் தற்போது யோகிபாபு ஹீரோவாக நடித்த ‘காக்டெயில்’ ஓடிடியில் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் கடந்த மார்ச் இறுதியில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில் ஊரடங்கு காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஜீ5யில் வரும் ஜூலை 10ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் பிஜி முத்தையா தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படமான ’காக்டெயில்’ என்ற திரைப்படத்தில் யோகி பாபு ஹீரோவாக நடித்துள்ளார். அவருடன் சாயாஜி ஷிண்டே, மைம் கோபி, சுவாமிநாதன் உள்பட பலர் நடித்துள்ளனர். விஜய முருகன் இயக்கத்தில், சாய் பாஸ்கர் இசையில், நவீன் ஒளிப்பதிவில், பாசில் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.
திரையரங்குகள் திறக்க தாமதமானால் மாஸ் நடிகர்கள் திரைப்படங்கள் உள்பட இன்னும் பல திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#Cocktail will be a Direct OTT release skipping theatres. Scheduled to release in Zee5 on July 10th, 2020 pic.twitter.com/zTVMxGfppX
— Yogi Babu (@yogibabu_offl) June 27, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments