பெண் இயக்குனரின் திருமணத்திற்காக இலவசமாக நடித்தேன்: யோகிபாபு

  • IndiaGlitz, [Monday,October 19 2020]

யோகி பாபு ஹீரோவாக நடித்த ’பேய் மாமா’ என்ற திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய யோகி பாபு, ‘பெண் இயக்குனர் ஒருவரின் திருமணத்திற்காக தான் இலவசமாக நடித்துக் கொடுத்ததாக கூறியுள்ளார்

இந்த விழாவில் பேசிய பிரபல இயக்குனர் ஆர்கே செல்வமணி, ‘ஒரு படத்தின் பட்ஜெட்டை பொறுத்து யோகி பாபு சம்பளம் வாங்க வேண்டும் என்றும் மார்க்கெட்டை வைத்து சம்பளம் வாங்க கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்தார்

அதன்பின் பேச வந்த யோகி பாபு ’நான் அதிகமாக சம்பளம் வாங்குவது இல்லை என்றும் இயக்குனர் செல்வராகவன் அவர்களிடம் உதவியாளராக இருந்த பெண் இயக்குனர் ஒருவர் தன்னை அணுகி, தான் ஒரு திரைப்படம் இயக்க விரும்புவதாகவும் உங்களை வைத்து ஒரு கதை எழுதி இருப்பதாகவும் இந்த படம் வெளிவந்தால் தான் தனக்கு திருமணம் என்றும் கூறினார். அவருக்காக அந்த படத்தில் நான் இலவசமாக நடித்துக் கொடுத்தேன்’ என்று கூறினார்.

மேலும் ’நான் ஓரிரு காட்சிகள் நடித்தாலே நான் ஹீரோவாக நடித்தது போல் பில்டப் செய்து விடுகிறார்கள் என்றும் ஆனால் இந்த படத்தில் நான் உண்மையிலேயே ஹீரோவாக நடித்து உள்ளேன் என்றும் அதனால் எனக்கு பயமாக உள்ளது என்றும் யோகிபாபு கூறினார். மேலும் இந்த படம் வடிவேலு அவர்களுக்காக எழுதப்பட்ட கதை என்பதால் நான் நடிக்க தயங்கினேன் என்றும், அவர் பெரிய ஜீனியஸ், அவர் அளவுக்கு என்னால் நடிக்க முடியாது என்று கூறியதாகவும், ஆனால் தனக்காக இயக்குநர் சில காட்சிகளை மாற்றி உள்ளதால் நான் நடிக்க சம்மதித்தேன் என்றும் யோகி பாபு தெரிவித்துள்ளார்

More News

800 படத்தில் இருந்து விலகிவிட்டாரா விஜய்சேதுபதி? அவரே அளித்த விளக்கம்!

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என  நடிகர் விஜய் சேதுபதி திட்டவட்டமாக கூறியிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

விலகி கொள்ளுங்கள் விஜய்சேதுபதி: முரளிதரன் கடிதத்திற்கு மக்கள் செல்வனின் பதில்!

தன்னுடைய வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுங்கள் என முத்தையா முரளிதரன் கடிதம் ஒன்றை எழுதி நிலையில் அந்த கடிதத்துக்கு 'நன்றி வணக்கம்' என விஜய் சேதுபதி பதிலளித்துள்ளார் 

வெறுப்பாகிய வேல்முருகன்: நின்னு விளையாடும் நிஷா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய டாஸ்க்கில் போட்டியாளர்கள் மூன்று பேரை நாமினேட் செய்ய வேண்டும் என்று கொடுக்கப்படுகிறது. அதில் அறந்தாங்கி நிஷா 3 பேரின் பெயர்களை சொல்லத் தயங்க,

கொரோனா நேரத்தில் செய்தித்தாள் படிப்பது பாதுகாப்பனதா??, மத்திய அரசு அளித்த புதிய விளக்கம்!!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகக் கூறப்பட்டாலும் புதிய தொற்றுகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே

பெட்ரோல் ஊற்றித் தீக்குளித்து தற்கொலை… ஆன்லைன் சூதாட்டத்தால் நேர்ந்த கொடுமை!!!

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதியில் ஆன்லைன் சூதாட்டத்தில் வியாபாரி ஒருவர் பல லட்சங்களை இழந்து அதனால் ஏற்பட்ட கடன் தொல்லையால் தீக்குளித்து தற்கொலை