HCL அதிபர் ஷிவ்நாடாருக்கு நடிகர் யோகிபாபு பாராட்டு
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர் HCL நிறுவனத்தின் அதிபர் ஷிவ் நாடார். பெரும் செல்வந்தரான இவர் தான் சிறுவயதில் படித்த மதுரையில் உள்ள இளங்கோ அரசுப் பள்ளிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சென்றார். அப்போது அந்த பள்ளியின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. உடனே தான் படித்த பள்ளியை மிகச்சிறந்த பள்ளியாக மாற்ற முடிவு செய்த ஷிவ்நாடார், அந்த பள்ளிக்காக ரூ.15 கோடி ஒதுக்கி, புதிய கட்டிடங்கள், ஸ்மார்ட் வகுப்பு, ஆசிரியர்களுக்கு உயர்தர பயிற்சி ஆகியவைகளை ஏற்பாடு செய்தார்.
15 அடி நீளம் கொண்ட கரும்பலகை, மாணவர்களின் தாகத்தை போக்க தண்ணீருக்கென தனி பிளாண்ட், சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் வகுப்பறைகள், 100 கணிணிகள், வசதிகள் நிறைந்த லேப், ஏசி வசதி செய்யப்பட்ட நூலகம், கூடைப்பந்து மைதானம் ஆகியவை தற்போது ஷிவ்நாடாரின் உதவியால் இந்த பள்ளிக்கு கிடைத்துள்ளது. இதனையடுத்து இந்த பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை அதிகமானது. தரமான கல்வி கிடைத்ததால் இந்த ஆண்டு இந்த பள்ளியில் படித்த 12ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் ஷிவ் நாடார் அவர்களின் இந்த உதவிக்கு தனது பாராட்டுக்களை நடிகர் யோகிபாபு தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதேபோல் ஒவ்வொரு தொழிலதிபர்களும் தாங்கள் படித்த பள்ளிக்கு உதவிகள் செய்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஸ்மார்ட் பள்ளிகளாக மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout