யோகிபாபுவின் திருமண வதந்திக்கு அவரே வைத்த முற்றுப்புள்ளி!

  • IndiaGlitz, [Saturday,February 01 2020]

பிரபல காமெடி நடிகர் யோகிபாபு அவர்கள் தற்போது கிட்டத்தட்ட அனைத்து முக்கிய நடிகர்களுடனும் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி ஒருசில படங்களில் அவர் நாயகனாகவும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் யோகிபாபுவுக்கு திருமணம் செய்ய அவரது வீட்டினர் முடிவு செய்து அவருக்கு பொருத்தமான பெண்ணை பார்த்து வருவதாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திடீரென பார்கவி என்ற பெண்ணை அவர் அடுத்த வாரம் திருமணம் செய்யவுள்ளதாக ஒருசில ஊடகங்களில் தகவல்கள் வெளிவந்தது. அதுமட்டுமின்றி திடீரென பார்கவி என்ற பெண்ணை அவர் வேண்டாம் என்று சொல்லிவிட்டு மஞ்சு என்ற பெண்ணை திருமணம் செய்ய போவதாகவும் வதந்தி பரவி வருகிறது.

இந்த நிலையில் தனுஷின் ’கர்ணன்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் திருநெல்வேலியில் இருக்கும் யோகி பாபு, தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது ’எனது திருமணம் பற்றி வந்த தகவல் அனைத்தும் தவறானவை என்றும் என் திருமண தகவலை வெகு விரைவில் நானே அறிவிப்பேன் என்றும் கூறியுள்ளார். இதனையடுத்து யோகி பாபு திருமணம் சம்பந்தமான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஐதராபாத் பெண் டாக்டர் கொலையை படமாக்கும் பிரபல இயக்குனர்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஹைதராபாத் பெண் டாக்டர் ஒருவர் நான்கு கயவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அதன் பின்னர் எரித்துக் கொலை செய்யப்பட்டார்

தனுஷின் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி குறித்த தகவல்!

 தனுஷ் நடித்த அசுரன் மட்டும் பட்டாஸ் ஆகிய திரைப்படங்கள் சமீபத்தில் வெளிவந்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்

பாஜகவில் இணைந்த அஜித்-விஜய் பட இயக்குனர்

மத்தியில் ஆட்சி செய்து வரும் பாரதிய ஜனதா கட்சியில் கடந்த சில மாதங்களாக திரையுலகை சேர்ந்தவர்கள் மற்றும் விளையாட்டு வீராங்கனைகள் இணைந்து வருகின்றனர் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

இன்னும் அணையாத காட்டுத்தீ.. ஆஸ்திரேலியாவில் அறிவிக்கப்பட்ட அவசர நிலை..!

ஆஸ்திரேலியாவின் தலைநகரான கான்பெராவை நெருங்கும் காட்டுத்தீயால் வெப்ப நிலை அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு  அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் வெற்று வார்த்தைகள்.. செயல்படுத்தும் விதமாக ஒரு திட்டம் கூட இல்லை..! பட்ஜெட்டை விமர்சித்த ராகுல் காந்தி.

நிதியமைச்சரின் இந்த உரை முற்றிலும் கார்ப்பரேட் நலன்களுக்காக இருப்பதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.