2 வெற்றிப்படங்கள் கொடுத்த இயக்குனரின் அடுத்த படத்தில் யோகிபாபு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தொடர்ச்சியாக இரண்டு வெற்றி படங்களை கொடுத்த நடிகர் மற்றும் இயக்குனரின் அடுத்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் யோகிபாபு நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருந்த ஆர்ஜே பாலாஜி, ‘எல்கேஜி’ என்ற படத்தின் மூலம் நாயகன் மற்றும் இயக்குநராக மாறினார் என்பது தெரிந்தது. இந்த படம் பெற்ற மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து ’மூக்குத்தி அம்மன்’ என்ற திரைப்படத்தில் நடித்து இயக்கினார். இந்த படமும் சூப்பர் ஹிட்டாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது அவர் பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான பதாய் ஹோ’என்ற படத்தின் தமிழ் ரீமேக் படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக கோவை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
'வீட்ல விசேஷங்க’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் தான் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக யோகி பாபு தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டு, ஆர்ஜே பாலாஜி உடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
ஆர்ஜே பாலாஜி ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கும் இந்தப் படத்தில் சத்யராஜ், ஊர்வசி உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிந்துவிடும் எனத் தெரிகிறது.
Guest Appearance in @RJ_Balaji Movie. pic.twitter.com/16WYZ95OGs
— Yogi Babu (@iYogiBabu) September 18, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments