சிவாஜி, கமலுக்கு அடுத்து யோகிபாபு எடுக்கும் புதிய முயற்சி
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகிபாபு தற்போது ஒரே நேரத்தில் பல படங்களில் காமெடி கேரக்டர்களிலும், ஒரு சில படங்களில் முக்கிய கேரக்டர்களிலும் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் வாரம் ஒரு படம் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் தற்போது அவர் இயக்குனர் புகழேந்தி இயக்கத்தில் ’காவி ஆவி நடுவுல தேவி' என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார்.
இந்த திரைப்படத்தில் யோகி பாபு 11 கேரக்டர்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. காதலர்களை சேர்த்து வைக்கும் குழலூதும் கண்ணன் கேரக்டரில் நடிக்கும் யோகிபாபு, இந்த படத்தில் முழுக்க முழுக்க காமெடி காமெடியில் கலக்கி உள்ளார் என்றும், இந்த படம் அவரது ரசிகர்களுக்கு ஒரு நகைச்சுவை விருந்தாக இருக்கும் என்று கருதப்படுகிறது. முன்னதாக சிவாஜி கணேசன் ’நவராத்திரி’ என்ற படத்தில் 10 கேரக்டர்களிலும் கமல்ஹாசன் ’தசாவதாரம்’ படத்தில் 10 கேரக்டர்களிலும் நடித்த நிலையில் தற்போது யோகிபாபு 11 கேரக்டர்களில் நடிக்கும் புதிய முயற்சியை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மனோன்மணி கம்பெனி சார்பில் ஆரூரான் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டதாகவும் விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து திரைக்கு வரும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments