பிரபல மலையால இயக்குனரின் ஃபேண்டஸி படத்தில் யோகிபாபு!

  • IndiaGlitz, [Tuesday,December 07 2021]

பிரபல மலையாள இயக்குநர் ரெஜிஷ் மிதிலா இயக்கத்தில், யோகிபாபு நடிக்கும், ஃபேண்டஸி திரைப்படத்தின் பூஜை சென்னையில் இன்று நடைபெற்றது.

மலையாள திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வரும் இயக்குநர் ரெஜிஷ் மிதிலா தமிழில் யோகிபாபுவை நாயகனாக வைத்து ஒரு புதிய படத்தை உருவாக்குகிறார். ரெஜிஷ் மிதிலா எழுதி, இயக்கி, தயாரிக்கும் இத்திரைப்படம் முழுக்க, முழுக்க ஃபேண்டஸி திரைப்படமாக உருவாகவுள்ளது. இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தின் பூஜையில் படக்குழுவினர் மற்றும் திரைபிரபலங்கள் கலந்து கொண்டனர்.

யோகிபாபு மற்றும் ரமேஷ் திலக் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் ஊர்வசி, கருணாகரன், ஜார்ஜ் மரியன், ஹரீஷ் உள்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கியுள்ளதாகவும், இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக சென்னை, ராஜஸ்தான் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் நடத்த படக்குழு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளீயாகியுள்ளது.

பரத் சங்கர் இசையில் கார்த்திக் எஸ் நாயர் ஒளிப்பதிவில் சைலோ படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை ரெஜிஷ் மிதிலா, லிஜோ ஜேம்ஸ் தயாரித்து வருகின்றனர்.