இறுதிக்கட்டத்தில் யோகிபாபுவின் அடுத்த படம்

  • IndiaGlitz, [Thursday,February 28 2019]

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான நடிகர் யோகிபாபு முக்கிய வேடத்திலும் ஒருசில படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. மேலும் 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி 2' படத்திலும் வடிவேலுவுக்கு பதிலாக யோகிபாபு நடித்து வருவதாக செய்திகள் வெளிவந்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் யோகிபாபு முக்கிய கேரக்டரில் நடித்து வரும் படங்களில் ஒன்றாகிய 'ஜாம்பி' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டு முதல் இரண்டு ஷெட்யூல்கள் திட்டமிட்டபடி படப்பிடிப்பு முடிந்தது. இந்த படம் ஒரே இரவில் ஒரு ரிசார்ட்டில் நடக்கும் கதை என்பதால் இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் ஈசிஆர் சாலையில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடைபெற்றது. சமீபத்தில் 200 இளம்பெண்களுடன் யோகிபாபு, யாசிகா ஆனந்த் உள்பட பலர் நடித்த கிளைமாக்ஸ் காட்சிக்கு முன் வரும் முக்கிய காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும், மிக விரைவில் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தொடங்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

யோகிபாபு, யாஷிகா ஆனந்த், கோபி சுதாகர், பிஜிலி ரமேஷ், கார்த்திக், சித்ரா, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்து வருகிறார். புவன் நல்லான் இயக்கி வருகிறார். வரும் கோடை விடுமுறையில் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.