காஜல் அகர்வால், சமந்தா, அமலாபால் பாணியில் யோகிபாபு
- IndiaGlitz, [Wednesday,October 23 2019]
கோலிவுட் திரையுலகில் முன்னணி பிரபலங்கள் தற்போது திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி வெப்சீரிஸ்களிலும் கவனம் செலுத்தி வருகின்றனர். திரைப்படத்தின் அடுத்த பரிணாம வளர்ச்சியான வெப்சீரீஸில் முன்னணி நடிகைகளான காஜல் அகர்வால், அமலாபால் சமந்தா, அஞ்சலி உள்ளிட்ட நடிகர்களும் கௌதம் மேனன், விக்னேஷ் சிவன், வெற்றிமாறன், சுதா கொங்காரா, வெங்கட் பிரபு உள்ளிட்ட பிரபல இயக்குனர்களும் தற்போது வெப்சீரிஸ் பக்கம் கவனத்தை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது வெங்கட் பிரபு இயக்க உள்ள வெப்சீரியல் ஒன்றில் ஏற்கனவே வைபவ், காஜல் அகர்வால், கயல் ஆனந்தி உள்பட பலர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த வெப்சீரீஸில் கோலிவுட் திரையுலகில் பிசியான காமெடி நடிகரான யோகிபாபு இணைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
மிகப்பெரிய பட்ஜெட்டில் திரைப்படத்திற்கு இணையாக இந்த வெப்சீரிஸ் தயாராகவிருப்பதாகவும், இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.