குஷியா இளைஞர்களுடன் கால்பந்து விளையாடிய யோகி பாபு… வேறலெவல் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நட்சத்திரமாக இருந்துவரும் யோகி பாபுவின் கிரிக்கெட் திறமையை ரசிகர்கள் ஏற்கனவே கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் அவர் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவை பார்த்து ரசிகர்கள் மேலும் வியந்த நிகழ்வு அரங்கேறியிருக்கிறது.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான “லொள்ளு சபா“ எனும் மேடை நிகழ்ச்சிக்கு ஸ்கிரிப்ட் ரைட்டராக பணியாற்றிவந்த யோகி பாபு ஒரு கட்டத்தில் அந்த நிகழ்ச்சியில் சிறுசிறு வேடங்களில் நடிக்கவும் ஆரம்பித்து பின்னர் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான “யோகி“ எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராகவும் சிறந்த குணச்சித்திரமாகவும் இருந்து வருகிறார்.
திருவண்ணாமலை மாவட்டத்தின் ஒரு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்த யோகி பாபு சிறிய வயதில் இருந்தே விளையாட்டின் மீது தீராத காதலுடன் இருந்து வந்துள்ளார். அந்த வகையில் கால்பந்து மற்றும் கிரிக்கெட் விளையாட்டின்மீது அதிக ஆர்வம் கொண்ட அவர் மாநில அளவிலான போட்டிகளிலும் பங்கேற்றுள்ள தகவல்கள் முன்பே வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியது.
அந்த வகையில் யோகி பாவு கிரிக்கெட் பந்தை பறக்கவிடும் காட்சிகள் குறித்த வீடியோக்கள் அவ்வபோது வெளியாகி இருந்தன. இந்நிலையில் தற்போது நீலகிரி மாவட்டத்திற்கு ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக சென்றுள்ள யோகி பாபு அங்குள்ள மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட மைதானத்தில் இளைஞர்களுடன் கால்பந்து விளையாடியுள்ளார். இதுகுறித்த வீடியோவை அவர் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிலையில் ரசிகர்கள் மெஸ்ஸிக்கே செம டஃப் கொடுப்பார் போலயே எனப் பாராட்டி வருகின்றனர்.
— Yogi Babu (@iYogiBabu) March 27, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments