close
Choose your channels

ஜெயம் ரவியின் இயக்கத்தில் யோகிபாபு?

Friday, December 21, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம் ரவி நடித்த 'அடங்கமறு' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் நேற்று அவர் ரசிகர்களின் கேள்விகளுக்கு சமூக வலைத்தளம் மூலம் பதிலளித்தார். அதில் ஒரு ரசிகர் நீங்கள் இயக்குனர் ஆனால் யாரை ஹீரோவாக நடிக்க வைப்பீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த ஜெயம் ரவி, 'நான் இயக்குனர் ஆனால் யோகிபாபுதான்' ஹீரோ என்று தெரிவித்தார். யோகிபாபு தற்போது காமெடி ரோலில் மட்டுமின்றி ஹீரோவாகவும் ஒருசில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தனக்கு மிகவும் பிடித்த ஹீரோயின் சிம்ரன் என்றும், 'தனி ஒருவன் 2' திரைப்படம் அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கும் என்றும், ஸ்கிரிப்ட் திருப்தியாக இருந்தால் பிற நடிகர்களின் படங்களில் வில்லனாகவும் நடிக்க தயார் என்றும், தான் நடித்த படங்களில் தனக்கு மிகவும் பிடித்த படம் 'பேராண்மை' என்றும் ரசிகர்களின் கேள்விகளுக்கு ஜெயம் ரவி பதிலளித்தார்.

மேலும் தனக்கு பிடித்த தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு என்றும், தமிழ் திரையுலகில் தனது நெருங்கிய நண்பர்கள் சிபி, ஜீவா மற்றும் ஆர்யா என்றும் ரசிகர்களின் கேள்விகளுக்கு ஜெயம் ரவி மேலும் பதிலளித்தார்

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment