close
Choose your channels

'டேய் நான் தாண்டா விநாயகர்': யோகிபாபுவின் 'யானை முகத்தான்' டிரைலர்..!

Tuesday, April 11, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

யோகி பாபு முக்கிய கேரக்டரில் நடித்த ’யானை முகத்தான்’ என்ற திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

‘யானை முகத்தான்’ என்ற விநாயகர் கடவுளின் கேரக்டரில் யோகி பாபு நடித்திருக்கும் நிலையில் அவரை கடவுள் என்று அறியாமல் உதாசீனப்படுத்தும் ரமேஷ் திலக், அதன் பிறகு ஒரு கட்டத்தில் புரிந்து கொண்டு விநாயகரை தேடுவது தான் இந்த படத்தின் கதை என்பது ட்ரெய்லரிலிருந்து தெரிய வருகிறது.

யோகி பாபு, ரமேஷ் திலக், ஊர்வசி, கருணாகரன், உள்பட பலரது நடிப்பில் உருவாகிய இந்த படத்தை ரெஜிஷ் மிதிலா இயக்கி உள்ளார். கார்த்திக் நாயர் ஒளிப்பதிவில், ஸ்யாலோ சத்யன் படத்தொகுப்பில் உருவாகிய இந்த படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார்.

தி கிரேட் இந்தியன் சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் கதை முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் நிலையில் இந்த படம் நிச்சயம் ரசிகர்கள் மனதை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment