ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் யோகிபாபுவின் 4 திரைப்படங்கள்

  • IndiaGlitz, [Saturday,September 28 2019]

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களான யோகிபாபு தற்போது அஜித், விஜய் உள்பட கிட்டத்தட்ட அனைத்து பெரிய ஹீரோக்களின் படங்களில் காமெடி வேடத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி முக்கிய கேரக்டரிலும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்

இந்த நிலையில் யோகி பாபு நடித்த நான்கு திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. வரும் அக்டோபர் 11ஆம் தேதி வெளிவரும் சுந்தர் சியின் ’இருட்டு’, வருண் நடித்த பப்பி, தமன்னா நடித்த ’பெட்ரோமாக்ஸ்’ மற்றும் ‘பட்லர் பாபு ஆகிய நான்கு திரைப்படங்களில் யோகி பாபு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

ஒரு காமெடி நடிகரின் நான்கு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாவது என்பது கோலிவுட் திரையுலகில் அரிதாக நடக்கும் நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோக அவர் தற்போது சுமார் பத்து படங்களில் காமெடி நடிகராகவும் ஓரிரண்டு படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது