46 வருடங்கள் கழித்து உருவாகும் இரண்டாம் பாக படத்தில் யோகிபாபு

  • IndiaGlitz, [Wednesday,March 20 2019]

பழம்பெரும் இயக்குனர் வி.சி.குகநாதன் நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். புகழ்மணி இயக்கவுள்ள இந்த படத்திற்கு 'காவி ஆவி நடுவுல தேவி' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படம் கடந்த 1973ஆம் ஆண்டு விசி.குகநாதன் கதை வசனம் எழுதிய 'காசி யாத்திரை' என்ற படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகவுள்ளது. எஸ்பி முத்துராமன் இயக்கிய இந்த படத்தில் பழம்பெரும் நகைச்சுவை நடிகர்களான விகே ராமசாமி, சோ ராமசாமி, தேங்காய் சீனுவாசன், எம்.ஆர்.ஆர். வாசு, சுருளிராஜன், மனோராமா உள்பட பலர் நடித்திருந்தனர்.

அதேபோல் தற்போது உருவாகும் இந்த படத்தின் இரண்டாம் பாகமான 'காவி ஆவி நடுவுல தேவி' என்ற படத்தில் தற்போதைய நகைச்சுவை நடிகர்களான ரோபோ சங்கர், மொட்டை ராஜேந்திரன், மயில்சாமி, மனோபாலா, சிங்கமுத்து ஆகியோர்களுடன் முக்கிய வேடத்தில் யோகிபாபுவும் நடிக்கவுள்ளார்.

வரும் ஏப்ரல் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
 

More News

விவசாயி உயிருடன் இல்லையா? தேர்தல் ஆணையத்திற்கு சீமான் கேள்வி

தேர்தல் ஆணையம் உயிர் உள்ள விலங்குகளின் சின்னத்தை தருவதில்லை என்று கடந்த சில ஆண்டுகளாக முடிவெடுத்துள்ளது.

வரலட்சுமியின் அடுத்த பட சென்சார் தகவல்

கடந்த ஆண்டு நடிகை வரலட்சுமி, விஜய்யின் 'சர்கார்', 'விஷாலின் 'சண்டக்கோழி', தனுஷின் 'மாரி 2' உள்பட ஒருசில வெற்றிப்படங்களில் நடித்த நிலையில்

கமல் கூட்டணி கட்சியின் வேட்பாளரா பவர்ஸ்டார் சீனிவாசன்?

கமல் கட்சியுடன் நேற்று செ.கு.தமிழரசனின் இந்திய குடியரசு கட்சி கூட்டணி வைத்த நிலையில் தென்சென்னை தொகுதியின் இந்திய குடியரசு கட்சியின் வேட்பாளராக தான் போட்டியிடவுள்ளதாக பவர்ஸ்டார் சீனிவாசன் .

கமல் கட்சியுடன் கூட்டணி: இந்திய குடியரசு கட்சிக்கு 4 தொகுதிகள்

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி 40 மக்களவை தொகுதிகளிலும், 18 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் தனித்து போட்டி என்று அறிவித்த நிலையில்

முதலமைச்சர் மகனை எதிர்த்து போட்டியிடும் நடிகைக்கு திரையுலகினர் ஆதரவு

தமிழகத்தை போலவே கர்நாடக மாநிலத்திலும் பாராளுமன்ற தேர்தல் பணிகளை அம்மாநில அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக செய்து வரும் நிலையில் மாண்டியா தொகுதி திடீரென நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது