close
Choose your channels

நாடு ரெண்டா போனா ராஜஸ்தான் எந்த பக்கம் போகும்? யோகிபாபுவின் 'போட்' டிரைலர்..!

Friday, July 26, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

யோகி பாபு நடிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் உருவான ‘போட்’ என்ற திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சுதந்திரத்திற்கு முன் அதாவது 1943 ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது. வெள்ளையர்கள் ஆட்சியில் இருந்த போது இரண்டாம் உலகப் போர் நடக்கிறது, அப்போது கடல் வழியாக தப்பிக்க நினைக்கும் ஒரு குரூப் படகில் செல்லும் போது நடக்கும் அசம்பாவித சம்பவங்களின் கோர்வை தான் இந்த படத்தின் கதை என்பது ட்ரெய்லரிலிருந்து தெரிய வருகிறது.

படகில் செல்பவர்களின் மனநிலை, அவர்களுடைய காமெடியான நக்கலான பேச்சு, இந்தியாவை இரண்டாக பிரிக்க நினைக்கும் வெள்ளையர்கள், கிண்டலான வசனங்கள் என இந்த ட்ரெய்லரில் இடம் பெற்றுள்ளதை அடுத்து படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக உங்கள் நாடு இரண்டாக போகும் என்று வெள்ளையன் கூறும்போது, ராஜஸ்தானை சேர்ந்த ஒருவர் நாடு ரெண்டா போன ராஜஸ்தான் எந்தப் பக்கம் போகும் என்று கேட்க, அப்போது உனக்கு வட்டி போகும் என்று கூறும் வசனம் சுவாரசியமாக உள்ளது.

யோகி பாபு, எம்எஸ் பாஸ்கர், சின்னி ஜெயந்த், சாம்ஸ், மதுமிதா உள்பட பலர் நடிப்பில் உருவாகிய இந்த படத்திற்கு மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவும், தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பு பணியையும் செய்துள்ளனர். ஜிப்ரான் இசையில் உருவாகிய இந்த படம் ஆகஸ்ட் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment