நாடு ரெண்டா போனா ராஜஸ்தான் எந்த பக்கம் போகும்? யோகிபாபுவின் 'போட்' டிரைலர்..!

  • IndiaGlitz, [Friday,July 26 2024]

யோகி பாபு நடிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் உருவான ‘போட்’ என்ற திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சுதந்திரத்திற்கு முன் அதாவது 1943 ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது. வெள்ளையர்கள் ஆட்சியில் இருந்த போது இரண்டாம் உலகப் போர் நடக்கிறது, அப்போது கடல் வழியாக தப்பிக்க நினைக்கும் ஒரு குரூப் படகில் செல்லும் போது நடக்கும் அசம்பாவித சம்பவங்களின் கோர்வை தான் இந்த படத்தின் கதை என்பது ட்ரெய்லரிலிருந்து தெரிய வருகிறது.

படகில் செல்பவர்களின் மனநிலை, அவர்களுடைய காமெடியான நக்கலான பேச்சு, இந்தியாவை இரண்டாக பிரிக்க நினைக்கும் வெள்ளையர்கள், கிண்டலான வசனங்கள் என இந்த ட்ரெய்லரில் இடம் பெற்றுள்ளதை அடுத்து படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக உங்கள் நாடு இரண்டாக போகும் என்று வெள்ளையன் கூறும்போது, ராஜஸ்தானை சேர்ந்த ஒருவர் நாடு ரெண்டா போன ராஜஸ்தான் எந்தப் பக்கம் போகும் என்று கேட்க, அப்போது உனக்கு வட்டி போகும் என்று கூறும் வசனம் சுவாரசியமாக உள்ளது.

யோகி பாபு, எம்எஸ் பாஸ்கர், சின்னி ஜெயந்த், சாம்ஸ், மதுமிதா உள்பட பலர் நடிப்பில் உருவாகிய இந்த படத்திற்கு மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவும், தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பு பணியையும் செய்துள்ளனர். ஜிப்ரான் இசையில் உருவாகிய இந்த படம் ஆகஸ்ட் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

விஷாலை வைத்து படம் எடுக்க தடை.. தயாரிப்பாளர் சங்கத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள காரணம்..!

தயாரிப்பாளர் சங்க பண முறைகேடு விவகாரம் நடிகர் விஷாலுக்கு எதிராக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இனி விஷாலை

ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள 'சட்னி சாம்பார்' முதல் எபிசோட் விமர்சனம்..!

ஹாட்ஸ்டாரில் வெளியாகி உள்ள 'சட்னி சாம்பார்' என்ற வெப் தொடரின் முதல் எபிசோட் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்.

அந்தரத்தில் ஒரு கால் ஒரு கை.. திருமணத்திற்கு பின் வேற லெவலில் வொர்க்-அவுட் செய்யும் நடிகை..!

பிரபல நடிகை கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பின்னும் அவர் வேற லெவலில் ஜிம்மில் வொர்க்-அவுட்  செய்த வீடியோவை

பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் வீட்டில் சூனியம் வைத்த பெண்? அதிர்ச்சி காரணம்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் வீட்டிற்கு பெண் ஒருவர் சூனியம் வைத்ததாக கூறப்படும் நிலையில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிக்பாஸ் தெலுங்கு போட்டியாளராகும் தமிழ் ஹீரோ.. டிஆர்பி எகிறுமா?

பிக் பாஸ் தெலுங்கு நிகழ்ச்சி விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் பிரபல தமிழ் ஹீரோ ஒருவர் போட்டியாளராக களம் இறக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.