நேற்று வெளியான குழந்தைகள் படத்திற்கு 14 நாடுகள் தடை: அதிர்ச்சி தகவல்
- IndiaGlitz, [Saturday,June 18 2022]
நேற்று வெளியான குழந்தைகள் திரைப்படத்திற்கு 14 நாடுகள் தடை விதித்து இருப்பதாக வெளிவந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டிஸ்னி மற்றும் பிச்சார் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் டாய் ஸ்டோரி சீரிஸ் அனிமேஷன் திரைப்படங்கள் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது என்பது தெரிந்ததே. குறிப்பாக உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் இந்த படத்தை விரும்பிப் பார்ப்பார்கள் என்பதும் அதனாலேயே இந்த படங்களின் வசூல் மிகப்பெரிய அளவில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்த பாகமான ’லைட் இயர்’ என்ற திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. Angus MacLane என்பவர் இயக்கியுள்ள இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த திரைப்படத்தை 14 நாடுகள் தடை விதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அரபு நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, லெபனான், எகிப்து உள்ளிட்ட நாடுகள் இந்த படத்தை தடை செய்துள்ளன. குழந்தைகள் விரும்பி பார்க்கும் இந்த படத்தில் ஒரு ஹீரோ இரண்டு பெண்களை திருமணம் செய்து கொள்வதாக காட்சிகள் இருப்பதாகவும், அது மட்டுமின்றி குழந்தைகளின் மனதை கெடுக்கும் வகையில் லிப் லாக் முத்தக் காட்சிகள், ஒருபாலின முத்தக் காட்சிகள் இடம்பெற்று உள்ளதாகவும் அதனால் தடை விதிப்பதாகவும் தடை விதித்த 14 நாடுகளும் காரணங்களாக கூறியுள்ளன.