75 நாட்கள் இருந்த கூல் சுரேஷ் சம்பளம் இத்தனை லட்சமா? ஆச்சரிய தகவல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியில் 75 நாட்கள் இருந்த கூல்ரேஷ்க்கு லட்சக்கணக்கில் சம்பளம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு தினசரி சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறைந்தபட்ச சம்பளம் 20,000 என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் நேற்று எலிமினேஷன் ஆன ஸ்கூல் சுரேஷுக்கு ஒரு நாளைக்கு 25 ஆயிரம் சம்பளம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதனை அடுத்து அவர் 75 நாட்கள் இந்த வீட்டில் இருந்த நிலையில் தினமும் 25000 என்றால் அவருக்கு மொத்தம் 75 நாட்களுக்கு 18 லட்சத்து 75 ஆயிரம் சம்பளம் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக பிக் பாஸ் வீட்டில் இருந்து கூல் சுரேஷ் வெளியேறும் போது சக போட்டியாளர்கள் குறித்து கமல்ஹாசன் முன்னிலையில் சில கருத்துக்களை தெரிவித்தார். மாயா, நீங்கள் நல்லவரா கெட்டவரா என்று தெரியவில்லை என்றும் உங்கள் விளையாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
பூர்ணிமா கடந்த இரண்டு வாரங்களாக ஒரிஜினல் பூர்ணிமாக இருக்கிறார் என்றும் இதே போல் நீங்கள் நீடித்தால் உங்களுக்கு டைட்டில் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.
முழுக்க முழுக்க கேமராவுக்காக நடிப்பதாக விசித்ராவை விமர்சனம் செய்த கூல் சுரேஷ், மணி, ரவீனா, தினேஷ், நிக்சன் ஆகியோர்கள் உள்பட மற்ற போட்டியாளர்கள் குறித்து பாசிட்டிவாக பேசினார்.
#CoolSuresh talk to HM#BiggBossTamil #BiggBossTamilSeason7 #BiggBoss7Tamil #BiggBoss #Maya #Vishnu #Poornima #Dinesh #VJArchana #Vichitra pic.twitter.com/6FcTx9NVYl
— unseen_b_b (@bb_unseen) December 16, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments