அராஜகத்தின் உச்சகட்டத்தில் ஐஸ்வர்யா: என்ன செய்ய போகிறார் கமல்?
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட ஐம்பது நாட்களை தொடப்போகின்றது. ஆனால் இன்று வரை இந்த நிகழ்ச்சி மக்களின் மனதை கவரவில்லை. மேலும் கமல் வரும் சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களிலும் சுயபுராணம் மற்றும் தற்புகழ்ச்சியே அதிகமாக இருப்பதாக நெட்டிசன்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
எனவே கோடிக்கணக்கில் முதலீடு போட்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி போதிய வரவேற்பை பெறாததால் எதையாவது செய்து பரபரப்பை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் சேனல் நிர்வாகிகளும், இந்த நிகழ்ச்சியின் ஸ்கிரிப்ட் ரைட்டர்களும் தள்ளப்பட்டனர். அதன் கொடூர தாக்கம் தான் நேற்றைய நிகழ்ச்சி
பாலாஜி, பொன்னம்பலம் உள்பட ஒருசிலரை சமயம் கிடைக்கும்போது பழிவாங்க வேண்டும் என்ற வெறியை மனதில் கொண்டுள்ள ஐஸ்வர்யாவுக்கு நேற்று ராணி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் சர்வாதிகார ராணியாம். இதை டாஸ்க் என்று பாராமல் சொந்தப்பகையை பாலாஜி மீது குப்பைகளை கொட்டி தீர்த்து கொண்டார் ஐஸ்வர்யா. ஷாரிக் தன்னை பயன்படுத்தி கொண்டதாக உளறி கொட்டிய ஐஸ்வர்யா, அவரையும் பழிவாங்கும் வகையில் அவருடைய பொருட்களை நீச்சல் குளத்தில் வீச உத்தரவு போட்டார்.
முழுசா சந்திரமுகியாகவே மாறிவிட்ட ஐஸ்வர்யா, இந்த நிகழ்ச்சியை பெண்கள், குழந்தைகள் பார்க்கின்றார்கள் என்ற நினைப்பு கூட இல்லாமல் எல்லை மீறுவது அராஜகத்தின், அநாகரித்தின் உச்சமாக கருதப்படுகிறது. மேலும் இந்த ராணி டாஸ்க்கில் நன்றாக நடித்தால் ஐஸ்வர்யாவை அடுத்த வாரமும் யாரும் நாமினேஷன் செய்ய முடியாத வகையில் மேலும் ஒரு சலுகையாம். இதற்கு பதிலாக ஐஸ்வர்யா தான் வின்னர் என்று பிக்பாஸ் அறிவித்துவிட்டு நிகழ்ச்சியையே முடித்துவிடலாம்.
கடந்த சீசனில் கலந்து கொண்ட ஜூலி, காயத்ரி ஆகியோர்களை நல்லவர் என்று சொல்ல வைக்கும் அளவுக்கு நிகழ்ச்சி அநாகரீகத்தின் உச்சமாக சென்று கொண்டிருக்கின்றது. கமல்ஹாசன் இந்த பிரச்சனையை சரியாக கையாள வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இந்த வாரமும் வழக்கம்போல் கமல் தன் சுயபுராணத்தையும், 'விஸ்வரூபம் 2' படத்தின் புரமோஷனிலும் கண்ணும் கருத்துமாக இருந்தால் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும் இழக்க வேண்டிய நிலை தான் ஏற்படும் என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com